Eran Wickramaratne
இலங்கைசெய்திகள்

வரி விதிப்பை இரட்டிப்பாக்குங்கள்!

Share

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபா வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வரி சதவீதத்தை அதிகரிப்பதன் மூலம்  முன்மொழியப்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

எனவே, 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக உயர்த்தி நடுத்தர வர்க்க ஊழியர்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

உழைக்கும் மக்கள் வருமானத்தை இழந்து பெரும் வரிச்சுமையால் மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இதனால் உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்த போஷாக்குக் குறைபாடு, நோய்களைத் தடுப்பது என்பன மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...