rtjyfs scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோருக்கு அறிவிப்பு

Share

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோருக்கு அறிவிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீட்டிற்கு வீடு பொருட்களை விநியோகம் செய்வதை அல்லது செய்ய வேண்டிய முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எனினும், தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு விநியோகம் செய்ய வேண்டிய விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க துறை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...