இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூருக்கு தங்க ஆபரணம் அணிந்து வராதீர்! – பொலிஸார் விசேட அறிவிப்பு

Share
IMG 20220804 WA0054
Share

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

இந்த மாதம் முதலாம் தேதியில் இருந்து வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.

ஆலய வளாகத்தில் தேவையானஅளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது

அத்தோடு விசேட பொலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான உற்சவமாக நல்லூர் ஆலய உற்சவம் இடம் பெறுவதனால் இந்த ஆலயத்தில் வரும் அடியவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும்.

ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கப்படுகின்றேன் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் இடம்பெறலாம். அந்த திருட்டுக்களை தடுப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு முக்கியம்.

இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் இங்கே அணியாக வந்து செயற்படுவார்கள்.

எனவே தங்களுடைய நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்திற்கு வரும்போது எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு நல்லூர் வளாகத்தில் சிவில் மற்றும் போலீஸ் சீருடையில் பொலிஸார் தேவையான அளவிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அத்தோடு திருட்டுத் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக கடந்த வாரத்தில் யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் சில திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன அந்த சம்பவங்களை நாங்கள் உற்று நோக்கும்போது அதாவது பொதுமக்களின் அசண்டையீனத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக தங்களுடைய வீடுகள் ஜன்னல்களை ஒழுங்காக பூட்டாமல் வெளியில் செல்லுதல் அல்லது பூட்டிவிட்டு திறப்பினை பாதுகாப்பில்லாத இடத்தில் பேணுவதால் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவே அவ்வாறான சம்பவங்களையும் பொதுமக்கள் நீங்கள் கருத்தில் எடுக்க கொள்ள வேண்டும்.

அத்தோடு தற்போதைய காலகட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது எனவே கடந்த காலங்களில் பொலிஸாருக்கு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு பொது மக்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கியதை போல தற்போது உள்ள நிலையிலும் பொலீசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...