சுழற்சி முறைக் கடன் திட்டத்திற்கு நிதி அன்பளிப்பு!

IMG 20221012 WA0005

யாழ்ப்பாணம் தாவடி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறைக்கடன் வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் ஒரு தொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தாவடி வடக்கில் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரவதனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா முக்கியஸ்த்தர் கே.கந்தசாமியின் நிதிப்பங்களிப்பில் மாதர் அபிவிருத்திச்சங்க நிர்வாகிகளிடம் குறித்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன் மற்றும் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு நிதியினை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3ஏ சித்தி பெற்ற மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி காந்தராசா நந்தாயினிக்கு அவரது பெறுபேற்றை பாராட்டி கே.கந்தசாமியினால் ரூபா இருபதாயிரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version