சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல்உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்தவேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.
நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment