நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (16.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 312.88 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.37 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 328.27 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 311.74 மற்றும் 326 ரூபாவாக மாறாமல் உள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 315 மற்றும் 327 ரூபாவாக மாறாமல் உள்ளது.
Leave a comment