யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்தரமுல்ல, பகுதியிலேயே நேற்றிரவு இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆயுர்வேத வைத்தியர் பல்பொருள் அங்காடியில், பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியேவந்தபோது, அங்கிருந்த யாசகர் ஒருவர், யாசகம் கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து யாசகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆயர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான யாசகர் சம்பவத்தின் பின்னர், தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
#SriLankaNews
Leave a comment