நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புக்காகவும் போராடும் இளைஞர்களை ஒடுக்கும் முயற்சிக்கு பாதுகாப்பு தரப்பினர் துணைபோகக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கையை விடுத்தார்.
” பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர், அநீதியான முறையில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்யாவிட்டால் பதவி பறிபோகும் என அஞ்சவும் கூடாது.” எனவும் ஆலோசனை வழங்கினார்.
பாதுகாப்பு தரப்பினர் நேர்மையாக செயற்படுவதால் அவர்களின் பதவிகள் பறிக்கப்படுமானால், எமது ஆட்சியில் நிச்சயம் அவர்களுக்கு மீள பதவிகள் வழங்கப்படும். அவர்களுக்காக நாம் துணை நிற்போம்.” எனவும் பொன்சேகா உறுதியளித்தார்.
அதேவேளை, மொட்டு கட்சி உறுப்பினர்களுடன் அமையும் இடைக்கால அரசு தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews