20220903 115656 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் விதைப்பொதிகள் விநியோகம்

Share

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ‘மாணாக்க உழவர்’ என்ற பெயரில் மாணவர்களுக்கான வீட்டுத் தோட்டப் போட்டியொன்றை நடாத்தவுள்ள நிலையில் அது தொடர்பான செயன்முறை வழிகாட்டற் கருத்தமர்வும் விதைப்பொதிகள் விநியோகமும் இன்றையதினம் இடம்பெற்றது.

நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(03) காலை 9.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன், விவசாய விஞ்ஞானி கலாநிதி எஸ். ஜே அரசகேசரி ஆகியோர் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு விதைப்பொதிகள் விநியோகிக்கப்பட்டதுடன் செயன்முறை வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை மற்றும் உணவுக்கான நெருக்கடி ஆகியனவற்றை கருத்திற்கொண்டு வீட்டுத்தோட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இப்போட்டி முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணாக்க உழவர்’ சான்றிதழ்களும், சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20220903 114126 20220903 115458

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...