மின் கட்டண உயர்வு – மனு தள்ளுபடி

image d255389fe8

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எதிர்த்து, மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.

#SriLankaNews

Exit mobile version