ஒரு மாதத்திற்கு முன் காணாமல்போன சிறுவர்கள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொடதெனியாவ பிரதேசத்தில் காணாமல்போன நிலையில், மீரிகம நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 10, 12 வயதுகளுடைய இரு சிறுவர்களும் காணாமல்போனமை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவர்களைத் தேடும் பணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டனர்.
இந்நிலையில், மீரிகமவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களினதும் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SrilankaNews