இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய வாராந்தம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவிற்சர்லாந்தில் இருந்து இரு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.
இதேவேளை சுவிற்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இலங்கையர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Leave a comment