கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவை
இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவை

Share

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவை

கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய மேலாளர் வி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறிலங்கா ஏர்லைன்ஸ் 2017இல் இருந்து 2020 வரை, கொழும்பு – கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு இடையில் மூன்று நேரடி விமானங்களை இயக்கியது.

எனினும் கோவிட் தொற்று காரணமாக அது நிறுத்தப்பட்டது. பின்னர் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை.

இதேவேளை இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் 9 நகரங்களுக்கு ஏற்கனவே இணைப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி கொல்கத்தாவில் இருந்து நேரடி சேவைகளை மீண்டும் தொடங்குவது தங்களின் செயல்திட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...