பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை
இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பரிஸூக்கு வாரத்தில் 3 தினங்கள் விமான சேவையை நடத்தவுள்ளது.
அதன்படி வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் முற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் மறுநாள் காலை 7.40 மணிக்கு பரிஸை சென்றடையும்.
மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
Leave a comment