Mahindanantha Aluthkamake
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

உணவுத் தட்டுப்பாடு குறித்து அரசுக்குள் மாறுபட்ட கருத்துகள்!

Share

2022 ஆம் ஆண்டில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், அனைவரும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோல நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமெனவும், அந்நிலைமையை இல்லாது செய்வதற்கு தற்போதே தயாராக வேண்டும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க சுட்டிககாட்டியுள்ளார்.

ஆனால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். -என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று அறிவித்துள்ளார்.

இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். 25 மாவட்டங்களில் உள்ள விவசாய அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வும் செய்தேன்.

உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படும் என்றபோதிலும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, பெருந்தொற்று ஏற்பட்டால் உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவது வழமையென ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...