யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு குறித்த டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்தனர்.
#SriLankaNews
Leave a comment