ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும்,திசாநாயக்க அந்த பதவியை ஏற்க மறுத்ததன் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக அப்பதவி வெற்றிடமாகவிருந்தது.
சாகல ரத்நாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சாகல ரத்நாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தவர் என்றும் வெற்றிடங்களுக்கு இருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்த வெற்றிடங்கள் எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துடன் நிரப்பப்படும் என்றும் ஐ.தே.க பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
#SriLankaNews
1 Comment