வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழப்பு!
கிளிநொச்சி- இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாய்க்காலில் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம்(01.05.2023) ஏற்பட்ட கடும் மழை காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#srilankaNews