அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம்
COP 28 மாநாட்டில் அரசாங்கத்தின் தூதுக்குழுவில் தான் இடம்பிடித்திருந்ததாக வெளியாகியுள்ள தகவலை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன மறுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (02.12.2023) டுபாயில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கையின் தூதுக்குழுவுக்கு நடுவில் மஹேல ஜயவர்த்தன பிரசன்னமாகியிருந்தார்.
இதனையடுத்து மஹேல அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் தூதுக்குழுவில் தான் அங்கம் வகிக்கவில்லை எனவும், COP 28 மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் நடத்திய நிகழ்வில் தான் கலந்துகொண்டதாகவும் மஹேல தெளிவுப்படுத்தியுள்ளார்.