301993495 939661550320013 1130064584475080176 n
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்!

Share

சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையில் புலம்பெயர் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மேற் கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் அதன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுக்கும் அமைவாகவே விசாரிக்கப்பட வேண்டும் இதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் மாறாக குற்றம் இழைத்த தரப்பான இலங்கையை உள்ளக விசாரணையில் விசாரித்தல் என்பது பாதிக்கப்பட்ட தரப்பை ஏமாற்றும் செயல் ஆகும்.

சர்வதேச நியமங்களுக்கு அமைவான குற்றங்களை அதற்கான சட்டங்கள் இல்லாத நீதித்துறைக் கொண்ட இலங்கையின் நீதித் துறையில் விசாரித்தல் என்பது நீதியானது அல்ல அத்துடன் குற்றம் இழைத்த தரப்பே தாங்களை தாங்கள் விசாரித்தல் உலக ஒழுங்கில் மிகவும் வேடிக்கையான விடயம்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவும் மீள் நிகழாமையை உறுதி செய்யவும் பரிகார நீதியை பாதிக்கப்பட்ட இனம் பெற்றுக் கொள்ளவும் மிகப் பொருத்தமான பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணைப் பொறிமுறையே ஏற்புடையது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பைச் சார்ந்த தாயக புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை மனிதவுரிமைப் பேரவையில் அங்கம் பெறும் கோ குறூப் நாடுகளின் பிரதி நிதிகளிடமும் அதனை வழி நடத்தும் நாடுகளிடமும் முன் வைத்து ஒரே நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் .

உள்ளக நீதி விசாரணை என்பதை பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் தொடர்ந்து தமிழர் தரப்பு உறுதி செய்ய வேண்டும் இத காலத்தின் கட்டாயம் அதுவே சர்வதேச நீதிக்கான கதவுகளைத் திறக்கும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...