300055825 452913076850341 6113938075727118486 n
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் வடக்கு, கிழக்குக்காவது உதவவேண்டும்! – மொட்டுக் கட்சி வலியுறுத்து

Share

“தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ‘மொட்டு’க் கட்சி எம்பியான ஜகத் குமார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிய ஆய்வுகளின் பின்னரே, சில அமைப்புக்கள் மற்றும் நபர்களைத் தடைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையைப் பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில் எவ்வித தவறும் கிடையாது. நாம் உலகுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்த பட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம். சிலவேளை, அந்த அமைப்புக்கள் எமது நாட்டுக்கு, சட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டால் மீண்டும் தடை செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் உள்ளன – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...