7 1 scaled
இலங்கைசெய்திகள்

திக்வெல்ல – ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க

Share

திக்வெல்ல – ஹசரங்கவை கடுமையாக எச்சரித்த உப்புல் தரங்க

கிரிக்கெட் அரங்கில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொள்ளுமாறு நிரோஷன் திக்வெல்லவுக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவ உப்புல் தரங்க அறிவுறுத்தியுள்ளார்.

உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் கிரிக்கெட் தலைமையகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஊடக சந்திப்பில் நிரோஷன் திக்வெல்லவின் ஒழுக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உப்புல் தரங்க,

‘கிரிக்கெட் அரங்கில் எவ்வளவுதான் பிரகாசித்தாலும் ஓழுக்கம் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என திக்வெல்லவுக்கு நாங்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளோம்.

இது வனிந்து ஹசரங்கவுக்கும் பொருந்தும். வனிந்து ஹசரங்க இரண்டு போட்டித் தடையுடன் தப்பித்துக்கொண்டது பெரிய விடயம்.

எனவே வருங்காலத்தில் ஹசரங்க பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.

இதேவேளை, குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே நிரோஷன் திக்வெல்லவை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

‘நிரோஷன் திக்வெல்ல ஒரு பதில் வீரர் மாத்திரமே. குசல் ஜனித் பெரேரா சுகவீனமுற்றதாலேயே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டோம். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அவிஷ்க பெர்னாண்டோவை ஆரம்ப விரராக இணைத்துள்ளோம்.

இளம் வீரர்களான லசித் குரூஸ்புள்ளே, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் எதிர்கால நட்சத்திரங்களாக வரக்கூடியவர்கள் என்ற கருத்து பரவலாக இருந்ததை சகலரும் அறிவர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அண்மைக்காலமாக அவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவருகின்றனர்.

அவர்கள் இருவரும் தங்களது குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு தொடர்ச்சியாக பிரகாசித்தால் அணிக்குள் ஈர்க்கப்படுவது உறுதி.

‘அவர்கள் இருவரில் ஒருவரையா, நிரோஷன் திக்வெல்லவையா குசல் பெரேராவுக்கு பதிலாக உள்வாங்குவது என நாங்கள் விரிவாக ஆராய்ந்தோம்.

ஆனால், அணித் தலைவர், பயிற்றுநர் ஆகிய இருவரும் நிரோஷன் திக்வெல்லவுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என விரும்பினர்.

தெரிவுக்குழுவினர் மாத்திரம் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட முடியாது. அணித் தலைவர், பயிற்றுநர் ஆகியோரது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்’ என உப்புல் தரங்க குறிபிட்டார்.

மேலும், தினேஷ் சந்திமாலை தாங்கள் ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறினார். சந்தர்ப்பம் வரும்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...