ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவே களமிறங்குவார் என அரசியல் களத்தில் தகவல் கசிந்துள்ளது.
மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா, ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியுரை ஏற்றுள்ளார்.
நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்சவை தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ‘அரசியல் பதவி’களை ஏற்பதற்கு விரும்பவில்லை என தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ச அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தம்மிக்கவிடம் பண பலம் உள்ளது. நிர்வாகத் திறமையும் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
தம்மிக்க பெரேராவுக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment