tamilnaadi 17 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் ஜனாதிபதி

Share

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் ஜனாதிபதி

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் அரசாங்கத்தாலும் ஜனாதிபதியாலும் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கண்டி போகம்பர சிறச்சாலை மைதானத்தில் “ஜெயகமு ஸ்ரீ லங்கா” திட்டத்தில் நான்காவது கட்டத்தின் முதலாவது நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

“இலங்கையானது விருந்தோம்பல் மற்றும் நன்கொடைகளை வழங்குவத்தின் மூலம் அறியப்படுகிறது. எமது தேசம் வரலாற்றைக் கொண்ட ஒரு தேசமாக இருந்தாலும், வரி செலுத்துவது நாட்டில் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக மாறியுள்ளது.

இலவச சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இலவசக் கல்வி ஆகியவற்றுக்கான நிதியைப் பெறவே வரிகள் பயன்படுத்தப்படுகின்றன இன்று சிலர் வரி விதிப்பதை எதிர்க்கின்றனர்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக வரிகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. எனவே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைப்பதாக யாராவது கூறினால் வரி விதிக்காமல் அரச சேவைகளை எப்படி வழங்கத் திட்டமிடுகிறார்கள் என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறோன் .

அந்த நேரத்தில் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் இந்த சேவைகளுக்கு நிதியளிப்பார்களா? ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் வரிகளை அதிகரிப்பது எமக்கு மிகவும் பாதகமான விடயமாகும்.

மேலும், வரியை உயர்த்தும்போது, அரசு அதிகாரிகள் உட்பட வரி செலுத்த வேண்டிய மக்கள் அனைவரும் எம் மீது கொந்தளிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இந்த நாடு மீண்டும் துண்டாடுவதைத் தடுப்பதற்காகவே இக்கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளோம். கடந்த மாதம் அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரித்து 300 பில்லியன் ரூபாய் உபரியாக உள்ளது.

300 பில்லியன் ரூபா உபரியான பணத்தை ஜனாதிபதி நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து கையிருப்பில் வைத்திருப்பதைத் தேர்ந்தெடுத்தார்.

எதிர்வரும் மாதங்களில் 100 -150 பில்லியன் கையிருப்பை நோக்கமாகக் கொண்டுள்ளோம். சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கைத் தலைவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த தலைவர்களை விமர்சிப்பவர்கள் முன்பு அவர்களின் ஆதரவாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாம் விரும்புவது நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து முன்னேற்றுவதுதான்.

நாம் அனைவரும் மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அப்போதுதான் எமது நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும்.” என்றார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...