இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைமீற மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்தே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment