images 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் உணவுப் பொருட்கள் அழிப்பு!

Share

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனையை முன்னெடுத்தனர்.

குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.

அத்துடன் உணவகம், ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...