நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜிநாமா செய்துகொண்டார். அதனை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
இந்நிலையிலேயே பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
நெருக்கடிக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதால், எந்த அணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நாளை அறிந்துகொள்ள முடியும்.
#SriLankaNews
Leave a comment