குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய இணைய விண்ணப்ப முறையின் மூலம் 35,000 இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், 3700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்தார்.
கடந்த ஜூலை 20 வரை பெறப்பட்ட 35,145 இணையம் மூலமான விண்ணப்பங்களில் 28,959 விண்ணப்பங்கள் சாதாரண சேவைக்காகவும், 14 நாட்களுக்குள் அனுப்பப்படும் கடவுச்சீட்டுக்களுக்காக 6,186 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
எனினும் 35,145 இணைய மூலமான விண்ணப்பங்களில், 16,869 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்தில் தங்கள் கைரேகைகளை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் 3,712 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சில விண்ணப்பங்களில், கைரேகையை வைக்கத் தேவையில்லை என்றாலும், கடவுசீட்டுக்களில் கையொப்பம் இடப்பட வேண்டிய கட்டாயப் படிவமான கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை பலர் பதிவேற்றவில்லை.
எனவே தெளிவான கையொப்பத்துடன் ஆவணத்தை மீண்டும் பதிவேற்ற விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- Department of Immigration and Emigration
- Economy of Sri Lanka
- news from sri lanka
- sri lanka
- sri lanka government
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka president
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- Srilanka Tamil News
- srilanka today news
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
Leave a comment