யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

jaffna university 5666

யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாள்கள் நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரால் கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

நாட்டில் தற்போது கொரோனா அபாயம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய அனைத்து விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனினும் நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.

இருப்பினும் யாழ்.பல்கலைகழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை ஒன்லைனில் நடத்தவதற்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version