இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15,874 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 47.4 சதவீத அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த வருடமும் 31,162 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த நிலையில் டெங்கு நுளம்பு தேங்காத வகையில் வீடுகளின் சுற்றுச்சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு தொற்று நோய் தடுப்புப் பிரவு அறிவுறுத்தியுள்ளது.
#SrilankaNews