செய்திகள்இலங்கை

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

Share
236186059 580502976691587 1383056697636242939 n
Share

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுக்கொண்டோருக்கும் இந்த வீரியம்கூடிய டெல்டா தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என குறித்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்,

நோய் எதிர்ப்பு சக்தியை கடந்துசெல்லும் வீரியம் டெல்டா கொரோனா திரிபுக்கு உண்டு. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும் தொற்று ஏற்படுவதைத் தடுக்க மக்கள் சுகாதார வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் தற்போது தொற்று உறுதியாவோரில் 95.8 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள். தற்போது கிடைக்கப்பெறும் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

நாட்டின் சில மாகாணங்களில் உறுதிப்படுத்தப்படுவோரில் 84 முதல் 100 வீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களே. எனவே மக்கள் மிக அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...