நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியில் முகவரின் செயற்பாட்டால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இவ் உரத்தை நாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிட்ட விவசாய அமைச்சு,
குறித்த முகவரின் செயற்பாடுகள் ஒப்பந்தத்துக்கு முரணாக காணப்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவை நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார இறுதிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நனோ நைதரசன் திரவ உர இறக்குமதியின் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படாமை போன்ற காரணங்களினாலேயே உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment