இலங்கைசெய்திகள்

உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 இண்டிகோ பயணிகள்

22 10
Share

உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 இண்டிகோ பயணிகள்

துருக்கியில் இருந்து டெல்லி (Delhi) மற்றும் மும்பை (Mumbai) செல்லவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டின் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், “முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது மேலும் பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை.

இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை மற்றும் பயணிகளை அனுகவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...