23 1
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம்..! அநுர உறுதி

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அந்தச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கூறியதாவது, “எமது நீண்ட கால எதிர்பார்ப்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களும் சமாந்தரமுடையவையாக உள்ளன என்று நான், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினேன்.

1979 இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராகக் கறுப்புக்கொடி பறக்கவிட்டு, சிறைக்குச் சென்றவர்கள் எமது உறுப்பினர்கள்.

அதேபோல் 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நாமே கடுமையாகப் பாதிக்கப்பட்டோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட்டங்களை நடத்தினோம்.

எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும் எனக் கூறினேன்.

சட்டமொன்றை இரத்துச் செய்யும்போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக்கூடாது. அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காது, சட்டத்தை ஈடுசெய்யக் கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம்.

ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தைக் கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...