இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொண்டோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதிகமானோருக்கு கொரோனாத் தொற்றுக்கு எதிராக வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைகின்றன.
இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டோருக்கு 6 மாதங்களுக்குப் பின் நோயெதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைவடைகிறது என உலகளவில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஐந்து முதல் 6 வாரங்கள் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே சுகாதாரவிதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment