34 1
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Share

இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதாவது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 2 இலட்சத்து 2,907 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த மாத இறுதியில் குறித்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 609 சுற்றுலாப் பயணிகளே கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...