கடும் கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க முடிவு

21 613ecfe6ac7bf

எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள நிலையில், வாராந்தம் இடம்பெறும் கொவிட் 19 செயலணிக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை.

கொவிட் –19 ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கூட ஆராய்ந்து முடிவு எடுக்கும். எனினும் இந்த வாரம் கூட்டம் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பிலும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொறுப்பானவர்களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாடு தொடர்ச்சியான மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராகம வைத்தியபீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் திருப்தியடையும் வகையில் குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version