இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews