இந்தியாவின் பெங்களூரு நகரில் இடம்பெற்ற ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இலங்கையின் நிதி உத்தரவாதம், சாம்பியா புரிந்துணர்வு ஒப்பந்தம், கானா உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, எத்தியோப்பியா மறுசீரமைப்பு ஆகிய தீர்வுகளை அடைய நாங்கள் ஒன்றாக பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த சில மாதங்களில் இவை அனைத்தும் செய்யப்படலாம் என்று தெரிவித்த அவர்,பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகளை முன்வைக்கக்கூடிய ஒரு செயல்முறையை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம் என்றார்.
பொது கட்டமைப்பின் குறைபாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு அரச மற்றும் தனியார் கடன் வழங்குபவர்களின் வட்டமேசை மாநாடு சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பாரம்பரிய பணக்கார கடன் வழங்கும் நாடுகள், தனியார் கடனாளிகள் மற்றும் சீனாவை ஒன்றிணைத்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன்களை மறுசீரமைக்க ஜி 20 முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews