17 13
இலங்கைசெய்திகள்

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

Share

இலங்கை கொள்வனவு செய்யவுள்ள கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பு

பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின்படி, ஒரு பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.

அத்துடன் இந்த சட்டத்தின் 23வது பிரிவின்படி, பொதுக் கடன் குறித்த சரியான, விரிவான மற்றும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவு அமைப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

பொதுநலவாய செயலகத்தால் வழங்கப்பட்ட பொதுநலவாய செயலக கடன் பதிவு மற்றும் மேலாண்மை அமைப்பையே தற்போது, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் பதிவு மற்றும் கடன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறது.

இது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் வருடாந்த உரிமத்தின் புதுப்பித்தல் மற்றும் நீடிப்பு தற்போது பொதுநலவாய செயலகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப பிரதிநிதிகள் குழுவை நிறுவுவது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பொதுநலவாய செயலகத்திடம் இருந்து பொதுநலவாய மெரிடியன் மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 64
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; தோல்வியிலும் 3வது இடத்தில் ஆர்சிபி!

ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...