தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில் குளிக்கச் சென்ற போது பெண் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முற்பட்ட இரண்டு இளைஞர்களும் நீரில் மூழ்கிய நிலையில், பிரதேச மக்களால் மூவரும் மீட்கப்பட்டனர்.
மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரின் சடலங்களும் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
#SriLankaNewas
Leave a comment