24 668d2cf03397f
இலங்கைசெய்திகள்

இந்தியா – சீனாவை கையாளும் விதத்தில் வேறுபாடு இல்லை: அலிசப்ரி

Share

இந்தியா – சீனாவை கையாளும் விதத்தில் வேறுபாடு இல்லை: அலிசப்ரி

இந்தியா – சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், ”இந்த மாத இறுதியில் நாங்கள் உத்தியோகபூர்வமாக கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்துவிடுவோம்.

அதன் பின்னர் அதனடிப்படையில் நாங்கள் பணம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். இலங்கை தனது பிணைமுறிகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் முன்னோக்கி செல்வதற்கு அதன் பிணைமுறி உரிமையாளர்கள் சிலருடன் தற்காலிக உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது.

தற்போது ஏனைய தனியார் கடன்வழங்குநர்களும் சர்வதேச நாணயநிதியமும் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இலங்கை 37பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடனை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது.

ஜூன் மாத இறுதியில் 10 மில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை எட்டியது.

22 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையின் பொருளாதாரம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டை பெருமளவில் நம்பியுள்ள அதேவேளை இந்தியாவின் தென்பகுதிக்கு அருகே பிரதான கிழக்கு மேற்கு கடற்பாதையில் இலங்கை அமைந்துள்ளமை அதனை முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாற்றியுள்ளது.

இலங்கையுடன் வலுவான கலாச்சார உறவுகளை கொண்டுள்ள இலங்கையும் சீனாவும் பலவருடங்களாக கொழும்பின் செல்வாக்கை பெறுவதற்காக போட்டிபோட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நாடுகளின்; மோதல்களின் நடுவில் இலங்கை சிக்குண்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை, துறைமுக அபிவிருத்தி மீள்சக்திதுறை அபிவிருத்தி போன்றவற்றிற்கு இந்தியா மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இருநாடுகளும் தங்கள் மின் கட்டங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது.

சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நிற்பது குறித்து கடந்த சில வருடங்களில் கரிசனை வெளியிட்டுள்ள புதுடில்லி தனது கடற்பகுதிக்கு அருகில் சீன கப்பல்கள் தரித்து நிற்பதன் நோக்கம் மற்றும் அதன் திறமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...