25 684eadbaacefb 1
இலங்கைசெய்திகள்

தயா கமகேயின் மூன்று நிறுவனங்கள் ஏல விற்பனை

Share

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த ஏல விற்பனை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.

தயா குரூப் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கட்டுமானம் (தனியார்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏல விற்பனையில் விடப்பட உள்ளன.

குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய சுமார் 10 கோடி ரூபா தொகையை வசூலிக்கவே, இந்த மூன்று நிறுவனங்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....