24 662745a7acf6d
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பதற்றம்

Share

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பதற்றம்

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆயுததாரிகள் ஏறியமையால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பேருந்து பயணத்துக் கொண்டிருந்த போது, ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரவில – கொடவெல சந்தி பகுதியில் ஆயுதங்களுடன் பேருந்தில் ஏறிய சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் நசுர்தீன் மொஹமட் நசுர்தீன் என்பவராகும். அவர் அனுராதபுரம், பரசங்கஸ்கதேவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...