முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
சர்வக்கட்சி அரசமைய வழிவிட்டே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
பஸில் ராஜபக்ச பதவி விலகிய பின்னர், அவரின் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேவேளை, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, மஹிந்த அமரவீர ஆகியோரும் பதவி துறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment