தம்புத்தேகம கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் கூறினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிரதேச சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
#SriLankaNews

