சர்வகட்சி அரசில் இணையுமாறு தினமும் அழைப்பு! – சலுகைகளுக்கு அடிபணிய மாட்டேன் என்கிறார் சஜித்

sajith 2

” சர்வகட்சி அரசில் இணையுமாறு எனக்கு 24 மணிநேரமும் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு இணையாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாது செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” ஆளுங்கட்சிக்குள் தற்போது நாடகம் அரங்கேறிவருகின்றது. மோதலும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

சர்வக்கட்சி அரசில் இணையாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இல்லாது செய்யும் திட்டம் இருப்பதாக எனக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனக்கு பதவி முக்கியம் அல்ல. மக்கள் என்னுடன் நிற்கின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version