யாழ்.மாநகர சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் தெரிவாகியுள்ளார்.
நேற்றுக் காலை தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுடனான கலந்து ரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல்வராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முன்னர் முதல்வராக இருந்து பதவி இழந்த இ.ஆர்னோல்ட் மீண்டும் முதல்வரானார். ஆயினும் அவர் சமர்ப்பித்த வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் அவர் பதவி இழந்தார்.
இந்நிலையில் மீண்டும் இடம்பெறும் முதல்வர் தெரிவுக்கு இம்முறை சொலமன் சிறில் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும்.
எதிர்வரும் 19ஆம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் அனைத்தும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment