மக்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஏறத்தாழ 3 வாரங்கள் தேவை என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவிக்கையில்,
ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் முன்னர் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் எரிவாயு நிரப்புதல் மற்றும் எரிவாயு நிரப்புதலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம், தரநிலைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளுக்கும் நாளாந்தம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன – என்றார்.
#SriLankaNews
Leave a comment