24 664ec3523dd8d
இலங்கைசெய்திகள்

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம்

Share

வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம்

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு -மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...